(த.தவக்குமார்)
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால்
ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட காரைதீவு சமுர்த்தி வங்கி பயனாளிகளுக்கான முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும்இ சமுர்த்தி தொடர்பாக பயனாளிகளுக்கு தெளிவூட்டும் நிகழ்வும் காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.எஸ்.சதீஷ் அவர்களின் தலைமையில் இன்று (18) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெக ராஜன் அவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம்.அச்சு முஹம்மட் அவர்களும் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாப். ஏ. எல்.ஏ ஹமீட் அவர்களும் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இதன்போது பயனாளிகளுக்கான வங்கி புத்தகமும், பணக்கொடுப்பனவும் பிரதம அதிதியால் வழங்கிவைக்கப்பட்டது.










Share To:

Post A Comment:

0 comments so far,add yours