த.தவக்குமார்
ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும்இ முதியோருக்கான தேசிய செயலகமும் இணைந்து நிபுணத்துவம் மிக்க வைத்தியர்களைக் கொண்டு சிரேஷ்ட பிரஜைகளுக்கான மருத்துவ முகாம் நேற்று (07) மாளிகைக்காடு அல்-ஹுசைன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வினை காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்கள். அத்துடன் இந்நிகழ்வில் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திரு. குறுஸ் குணரத்தினம் அவர்களும், மாளிகைக்காடு கிழக்கு, மத்தி, மேற்கைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களும்இ பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.
இதன் போது தொற்றா நோய்களுக்கான மருத்துவ பரிசோதனை கண் காது,மூக்கு தொண்டை தொடர்பான மருத்துவ பரிசோதனை, வாய்ச் சுகாதாரம் மற்றும் பல் தொடர்பான மருத்துவ பரிசோதனை, ஆயுர்வேத மருத்துவப் பரிசோதனைகள் போன்ற பிரிவுகளில் கல்முனை அஸ்ராப் வைத்தியசாலை, காரைதீவு பிரதேச வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை வைத்தியர்களை கொண்டு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.








Post A Comment:
0 comments so far,add yours