(எஸ்.சதீஸ்)
சர்வமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கையின் 18 மாவட்டங்களிலிருந்தும் இந்து இஸ்லாம் பௌத்த கிறிஸ்தவ மதத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் மட்டக்களப்புக்கு வருகை தரவுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான இணைப்பாளர் ஆர். மனோகரன் தெரிவித்தார்.இந்த விஜயம் மிக விரைவில் மட்டக்களப்பில் இடம்பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முரண்பாடற்ற, நீண்ட, நிலைத்து நிற்கும் சமாதானத்திற்கு பல்வேறுபட்ட இலங்கையர்கள் அனைவருக்குமிடையிலான கலந்துரையாடல்களும், விவாதங்களும், இணக்கத்துடனான புரிந்து கொள்ளும் முடிவுகளும் அவசியம் என்பதையும் மீள வலியுறுத்துவதற்காகவே இந்த சமூக நல்லிலணக்க விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
Post A Comment:
0 comments so far,add yours