குறுகிய சுய இலாப அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் நின்று இன, மத, மொழி பேதங்கள் பாராமல் நாட்டு மக்கள் எல்லோருக்கும் மகத்தான சேவைகளை புரிபவராக அமைச்சர் மனோகணேசன் விளங்குகி     ன்றார் என்று தேசிய நல்லிணக்கம், அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோகணேசனின் அம்பாறை மாவட்டத்துக்கான இணைப்பாளர் றிப்கான் முஹமட் தெரிவித்தார்.

தேசிய மொழி கல்வி நிறுவனத்தால்  இம்மாவட்டத்தை சேர்ந்த தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 12 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சிங்கள மொழி கற்கை நெறியின் நிறைவு நாள் விழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதை தலைமை தாங்கி நடத்தியபோது றிப்கான் முஹமட் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ஆயினும் அம்பாறை மாவட்டத்திலும் அபரமிதமான வேலை திட்டங்களை மேற்கொண்டு வருகின்றார், ஆனால் இவருக்கு இம்மாவட்டத்தில் தேர்தலில் வேட்பாளராக நிற்க போவதே இல்லை. ஏனைய அமைச்சர்கள் அம்பாறை மாவட்டத்துக்கு உரிய சேவைகளை வழங்க தவறுகின்றனர், ஆயினும் மனோ கணேசன் இம்முறையும் கணிசமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டு தந்திருக்கின்றார், எனது வேண்டுகோளை ஏற்று கோடி கணக்கான நிதி ஒதுக்கீடு மேற்கொண்டு உள்ளார், எமது மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன் எமக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக செயற்படுகின்றார். அவருக்கு இத்தருணத்தில் எனது விசேடமான நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்றார்.

கற்கை நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த ஊடகவியலாளர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இவ்விழாவில் பேராளர்களாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், அம்பாறை மாவட்ட செயலக  தேசிய ஒருமைப்பாடு மேம்பாட்டு உத்தியோகத்தர் பி.பிரதீஸ்கரன், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜவ்பர் ,அம்பாறை மாவட்ட  முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம் டில்சாத் , சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீத், சிங்கள மொழியை கற்பித்து கொடுத்த வளவாளர்களான என்.எம்.எம்.புவாட், ஏ.எம்.முஜீப், ஏ.பி.ஆரிப், கே.பி.பிரதீப் போன்றோர் முன்னிலையில் திறமைகளை வெளிக்கொணர்ந்து காண்பித்தார்கள். தமிழர் ஊடக மையத்தின் தலைவர் த. தர்மேந்திரா சிறப்பு கவிதை வழங்கினார். அதிதிகள் மற்றும் வளவாளர்கள் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours