ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே எழுத்து வடிவிலான ஒப்பந்தங்கள் தமிழ்மக்கள் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே மக்கள் வாக்களிக்க வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாணசபை சிரேஸ்ட உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகரவிடுதலைமுன்னணியின் முக்கியஸ்தருமான இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவதரு ஆறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் மக்கள் தங்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளரிடம் தமிழ்த்தலைமைகள் பேரம் பேசுகின்ற  சக்தியாக மாறக்கூடிய சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இதை பயன்படுத்தி  குறிப்பாக,
1. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் கிழக்கு மாகாணத்தில் மத்திய அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் அபிவிருத்தியில் இனவிகிதாசாரத்திற்கு ஏற்றவாறு நிதி ஓதுக்க மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்.
2. விகிதாசார ரீதியாகவும். பாதிப்பிற்கு ஏற்றவாறும் அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துதல் இத்திட்டம் உள்ள+ராட்சி சபையிலும், மாகாணசபையிலும், பாராளுமன்றத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
3. வடகிழக்கில் யத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் ஏற்பட்டுத்தப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பான விடயத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.
4. கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் சட்டவாக்கம் செய்யப்பட்ட மாகாணசபை முறமையான 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.  
5. வடகிழக்கிலுள்ள தமிழ்பேசும் மக்களுக்காக நிரந்தர தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற, அமுல்படுத்த முன்மாதிரியான செயல்திட்டம் ஒன்றை முன்வைத்து அமுல்படுத்தப்பட வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைத் தவிர நடைமுறைப்பிரச்சினைகள் அதிகமாக உள்ளன. இவைகளுக்குள் முரண்பாடுகள் ஏற்படக்கூடிய பல விடயங்கள் உள்ளன. இவ்விடயங்கள் தொடர்பாக எந்த இனங்களும் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஒரு சரியான அமைப்பொன்றை சட்டரீதியாக உருவாக்கப்பட வேண்டும்.
இத்தோடு மத்தி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களின் தனிப்பட்ட ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற வளங்களைச் சூரையாடுதல், நிருவாகத்தில் அரசியல் பலத்தை பிரயோகித்தல், ஒருபக்கச்சார்பான நிதி ஓதுக்கீடு, நியமன விடயங்களில் ஏற்றத்தாழ்வு, மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி, காணிதொடர்பானவை  இப்படிப்பட்ட தவறான விடயங்களில் தமிழ் மக்கள் பாதிப்படையக் கூடியவாறான செயற்பாடுகளை தேர்தலுக்கு முன்னரே நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தோடு இவ் விடயங்களை அமுல்படுத்தாத பட்சத்தில் வடகிழக்கிலுள்ள தமிழ் கட்சிகளாவது தேர்தல் காலத்தில் பொது உடன்பாட்டுக்கு வந்து செயல்படுவது ஆரோக்கிய மானதாக இருக்கும்.
அவை நடைமுறைக்கு இல்லாத  பட்சத்தில்  கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் கட்சிகளாவது பொது உடன்பாட்டு வந்து ஒரணியில் திரள இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours