(த.தவக்குமார்)
மதாந்த சத்சங்க பிராத்தனை,சொற்பொழிவு நிகழ்வு தலைவர் கு.ஜதிஸ்குமார் தலைமையில் நேற்று சனிக்கிழமை மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண கலாச்சார மண்டபத்தில் சடைபெற்றது.
இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தர் மகராஜ் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.ஆரம்ப நிகழ்வாக ஆரதி,ஸ்ரீ ராமகிருஷ்ணர் அமுத அமுதமொழிகள் படிப்பு,பஜனை,சிறார்களின் கலை நிகழ்வுள்,சொற்பொழிவு கேள்வி பதில் ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றது.
அன்றைய நிகழ்வில் ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தர் மகராஜ் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றப்பட்டது. இந்நிகழ்வில் அறநெறிப்பாடசாலை மாணவர்கள்,ஆன்மீக அமைப்புகளின் உறுப்பினர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours