மட்டக்களப்பு கித்துள் காட்டுக்கு உள்ளுர் தயாரிப்கு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (28) மாலையில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்
கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த சிறிக்காந்தன் தனு என்ற 14 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனுடன் 4 பேர் காட்டில் வேட்டைக்கு உள்ளுர் தயாரிப்பான கட்டுத்துவக்குடன் சம்பவதினம் மலை சென்றுள்ளனர் இந்த நிலையில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சிறுவன் படுகாயமடைந்ததுள்ளார்
இதனையடுத்து சிறுவனை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours