(எஸ்.சதீஸ்)
15.09.2019 தினமான பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களால்
கொம்மாதுறை முல்லை வீதி திறந்து வைக்கப்பட்டது. 

இவ் வீதிக்கான நிதி ஊரக எழுச்சித்
திட்டத்தின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் வழங்கப்பட்டது. சீரற்ற
நிலையில் இருந்த பாதை திருத்தியமைக்கப்பட்டமை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
மேலும் பல வீதிகளை விருத்தி செய்து
தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், மக்கள் சந்திப்பின் போது
மக்களின் தேவைகள், குறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. அதன் போது காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், தேவைகள் பற்றியும்
கலந்துரையாடப்பட்டன.




Post A Comment:
0 comments so far,add yours