கே.கிலசன் 
நாவிதன்வெளி 15ம் கிராமம் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான "தீர்வுக்கான அணி- 2.0" (SOLUTION SQUAD- 2.0) எனும் நிகழ்வு வேப்பையடி கமு சது கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வ.யதுர்ஷன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் விசேட அதிதியாக உலக தரிசனம் நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.செல்வபதி சிறப்பு அதிதிகளாக கலைமகள் மகா வித்தியாலய அதிபர் என்.பாலசிங்கம் பிரதி அதிபர்திரு.பேரானந்தம் தம்பலவத்தை மட் பட் கணேசா வித்தியாலய அதிபர் எஸ்.நேசராசா அன்னமலை 02 கிராம சேவகர் திரு.கேந்துஜன் அன்னமலை 02 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் போட்டியாளர்களான மாணவர்கள் மற்றும் புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாணவர்களுக்கான கணித விஞ்ஞான விநாடி போட்டியின் இறுதிச் சுற்றுப்போட்டியில் கமு சது கலைமகள் வித்தியாலய மாணவர்களும் மட் பட் இராமகிருஷ்ண மகா வித்தியாலய மாணவர்களும் போட்டியிட்டனர். நாவிதன்வெளி கோட்டத்திலுள்ள 6 பாடசாலைகளும் போரதீவுப்பற்று கோட்டத்திலுள்ள 6 பாடசாலைகளும் பங்குபற்றிய இப்போட்டியிலே இறுதிப் போட்டிக்கான தகுதியை இவ்விரு பாடசாலைகளும் பெற்றிருந்ததுடன். இறுதிப் போட்டியில் 4 சுற்றுக்களிலும் 140 புள்ளிகளை பெற்று முதலிடத்தை வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலமும் 130 புள்ளிகளை மண்டூர் இராமகிருஷ்ணா மகா வித்தியாலயம் பெற்று இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் 2வது வருட போட்டியின் வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கிண்ணமும் சான்றிதழும் அத்தோடு புலைமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்புக்களும் அதிதிகளால் வழங்கி வைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours