(காரைதீவு  நிருபர் சகா)


காரைதீவுப் பிரதேசசபையின் கடற்கரை சிறுவர்பூங்கா நவீனமயமாக்கப்பட்டுவருகிறது.

நீண்டகாலமாக பராமரிக்கப்படாமலிருந்துவந்த இந்தபூங்காவை சிறுவர்கள் பெரியோர்களின் பொழுதுபோக்கு மையமாக மாற்றவேண்டுமென தவிசாளர் கே.ஜெயசிறில் எடுத்தமுயற்சியில் கடந்தவாரம் முதற்கட்டமாக நவீனமயடுத்தப்பட்டது.

சிறுவர்கள் பாதுகாப்பாக ஆனால் சுதந்திரமாக மகிழ்ச்சியுடன் ஓடி ஆடி விளையாடுவதற்கேற்றவிதமாக நகரப்புறங்களில் இருக்கும் விளையாட்டுசாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கடற்கரைக்கு மிகஅண்மையில் சுற்றவர பாதுகாப்பு மதிலுடன் மனோரம்மியமான சூழலில் அமைக்கப்பட்டுள்ள இச்சிறுவர் பூங்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான மூவினமக்களும் வருகைதருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். எனினும் கடந்தகாலங்களில் அங்குள்ள சாதனங்கள் மற்றும் சுற்றவுள்ள இரும்புவேலிகள் துருப்பிடித்து பாதுகாப்பின்மையாகஇருந்தன.

பொழுதுபோக்கிற்கான ஒரேயொரு மையமாக இதுகாணப்படுவதனால் இப்பூங்காவை நவீனமாக சிறுவர்கள் பாதுகாப்பாக விளையாடுவதற்கேற்ப அபிவிருத்தி செய்யவேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை தவிசாளர் ஜெயசிறில் முதற்கட்டமாக நிறைவேற்றியுள்ளார்.

அடு;த்தவருட முற்பகுதியில் மேலும் பலசாதனங்கள் பொருத்தப்பட்டு அபிவிருத்திசெய்யப்படவிருக்கின்றன. அனைத்து ஏற்பாடுகளும் வெளிப்படைத்தன்மையுடன் உரியதரப்பினரால் மேற்கொள்ளப்பட்டமையை அனைவரும் வரவேற்கின்றனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours