(த.தவக்குமார்)
மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தின் பரிசளிப்பு நிகழ்வு பாடசாலை அண்மையில் நடைபெற்றது .

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தின் பரிசளிப்பு நிகழ்வு மட்டக்களப்பு  நூற்றாண்டு நட்சத்திர அரிமா லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் பாடசாலை அதிபர் எஸ் தர்மசீலன் தலைமையில் அண்மையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .

 நடைபெற்ற பரிசளிப்பு தின நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும்  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த புள்ளிகளையும் கல்வி பொது தர சாதாரண தரத்தில் சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

இந் நிகழ்வில் மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திர அரிமா லயன்ஸ் கழகத்தின் தலைவர் கே.ஞானரெட்ணம்  மட்டக்களப்பு மாவட்ட 306 சி டு ஆளுநர் சபை பிரதி செயலாளர் லயன் எ .செல்வேந்திரன்  மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திர அரிமா லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள் இபாடசாலை ஆசிரியர்கள்  மாணவர்கள்  பெற்றோர் பழையமாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். 











Share To:

Post A Comment:

0 comments so far,add yours