(த.தவக்குமார்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/ஆணைகட்டியவெளி நாமகள் வித்தியாலத்தில் கஷ்டமான நிலையிலும் கூட இவ் வருடம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைவரும் 70 புள்ளிக்கு மேல் பெற்று 100 வீதச் சித்தியினை அடைந்துள்ளனர்.
இப் பாடசாலையில் இருந்து 15 மாணவர்கள் விண்ணப்பித்து அனைத்து மாணவர்களும் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இதில் 8 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதுடன் 5 மாணவர்கள் 100 புள்ளிக்கு மேலும், 2 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேலும் பெற்று 100 வீதச் சித்தியினைப் பெற்றமை சாதனையாகும்.
சாதனை புரிந்த தற்காலிக அதிபர் திரு.க.ஜெயகரன் அவர்களையும், மாணவர்களை பரீட்சைக்கு வழிகாட்டி ஊக்குவித்த ஆசிரியர் செல்வி வை.கங்காதேவி அவர்களையும் மாணவர்களையும், பெற்றோர்களையும் கல்வி வலய அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.


Post A Comment:
0 comments so far,add yours