காரைதீவு நிருபர் சகா

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட செயலகம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு  (26)சனிக்கிழமை எழுத்தாளர் சந்திப்பொன்றை  காரைதீவு மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் மாவட்டகலாசார உத்தியோகத்தர் எ.எம்.றின்சான் தலைமையில்  நடாத்தியது.இச்ந்திப்பின்போது ர்திதாக அம்பாறை மாவட்ட எழுத்தாளர் பேரவையொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.


நிகழ்வில்  அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் சட்டத்தரணி எ.எம்.லத்தீப் பிரதம அதிதியாககலந்துகொண்டார்.பேராசிரியர் றமீஸ்அப்துல்லா  டாக்டர் புஸ்பலதா லோகநாதன் எழுத்தாளர் பீர்முகம்மட் கல்வியியலாளர் வி.ரி.சகாதேவராஜா விமர்சகர் ஜெஸ்மிமூசா உளளிட்ட பலா எழுத்தாளர்கள்  உரையாற்றினர் 

அம்பாறை மாவட்டத்தில் கலைஇலக்கியத்துறையில் நூல்களை வெளியிட்ட எழுத்தாளர்களை ஒன்றுதிரட்டி மாவட்ட நூல்வெளியீட்டாளர்கள் பேரவையொன்றை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நிருவாகசபை தெரிவானது. 

தலைவராக மேலதிகஅரசாங்க அதிபர் எ.ம்.லத்தீப்  இணைப்பாளராக மாவட்ட கலாசாரஉத்தியோகத்தர் றிம்சான் ஆகியோர்  பதவிவழி தெரிவானார்கள். உபதலைவர்களான எழுத்தாளர் வி.ரி.சகாதேவராஜா கவிஞர் பாலமுனை பாறுக் செயலாளராக கவிஞர் விஜிலிமூஸா உபசெயலாளர்களாக எழுத்தாளர் ஜெகதீஸ்வரிநாதன் கிராமத்தான் கலீபா  பொருளாளராக எ.எம்.மக்கீன்சா ஆகியோருடன்பிரதேசசெயலக ரீதியாக ஒவ்வொரு எழுத்தாளரும் தெரிவானார்கள்.

அடுத்த திட்டமிடல் அமர்வு எதிர்வரும் 30ஆம் திகதி நிந்தவூர் பிரதேசத்தில் நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours