கே.கிலசன்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் புதிய ஜனநாயக முன்னணியின் கல்முனை பிரதேச தமிழ்த் தலைமைக் காரியாலயம் கல்முனையில் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் 2019 இற்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் நாட்டின் சகல பாகங்களிலும் கட்சி அலுவலகங்கள் திறந்துவைக்கப்பட்டு பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கல்முனையிலும் புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி அலுவலகமும் சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்ட்டது.
கல்முனை மாநகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.செலஸ்ரினா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெற்றோலிய கூட்டுத்தாபன அமைச்சர் அனோமா கமகே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கருணாரட்ன அத்துக்கொரல ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை பிராந்திய அமைப்பாளர் சட்டத்தரணி ரஷாக் பொத்துவில் பிராந்திய அமைப்பாளர் யு.கே.ஆதாம்லெப்பை ஆகியோர் அதிதிகளாகவும் மற்றும் அதிகளவிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது உரையாற்றிய பெற்றோலிய கூட்டுத்தாபன அமைச்சர் அனோமா கமகே கல்முனை பிரதேசம் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ரணசிங்க பிரேமதாஸவுக்கும் ஆதரவாகவே இருந்து வருகிறீர்கள் அதேபோல எதிர்வரும் 16ம் திகதி நடைபெறும் தேர்தலிலும் உங்களுடைய முழுமையான ஆதரவைத் தந்து கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்களை ஜனாதிபதியாக்க வேண்டுமென்பதோடு
இனவாதம் பேசுகின்ற எதிர்த்தரப்பினர் ஆட்சிக்கு வந்தால் எவ்வாறான அடக்குமுறைகள் தொடருமென்பதையும் நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமெனவும் கருத்துரைத்தார்.

Post A Comment:
0 comments so far,add yours