(தி.தயாளன்)
ஒரு சமூகத்தின் ஒற்றுமையே அந்ந சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் அவர்கள் சார்ந்த இடத்தின் அபிவிருத்திக்கும் முக்கிய கருவியாக விளங்குகின்றது. துறைநீலாவணை ரீ.என் அவுஸ்திரேலியா புலம்பெயர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பொறியியலாளர் திரு.க.கனகரெத்தினம் அவர்கள் தெரிவித்தார்.
துறைநீலாவணை ரீ.என் அவுஸ்திரேலியா புலம்பெயர் அமைப்பின் அனுசரணையில் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் ஆதரவுடன் துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் அமையத்தின் ஏற்பாட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட துறைநீலாவணை மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தினை மாணவர்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவரும் மாவட்டசெயலகத்தின் பிரதம கணக்காளருமான க.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் உரையாற்றுகையில் இந்த அபிவிருத்தித் திட்டமானது ரீ.என் அவுஸ்திரேலியா புலம்பெயர் அமைப்பு மற்றும் துறைநீலாவணை முன்னேற்ற மையப்படுத்தல் அமைப்பு போன்றவற்றின் வேண்டுகோளுக்கிணங்க மத்திய நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் துறைநீலாவணை குமரப்போடியார் குளம் புனரமைக்கப்பட்டபோது அங்கிருந்து அகற்றப்பட்ட மண்ணைப் பயன்படுத்தி இவ்விளையர்டு மைதானம் புனரமைப்புச்செய்யப்பட்டது
இச்செயற்திட்டமானது ரி.என் அமைப்பினது நிதி உதவியுடனும் முன்னேற்ற மையப்படுத்தல் அமைப்பு துறைநீலாவணை மகாவித்தியாலய அதிபர்,ஆசிரியர்கள்,பழையமாணவர்கள்,பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர்,கல்விச்சமூகம், பொதுமக்களது ஆதரவுடன் இடம்பெற்றது
இதன்போது அதிதிகளாக மட்டக்கப்பு மாவட்ட அரசஅதிபர் மா.உதயகுமார்,பட்டிருப்புவலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம்,உதவிப்பிரதேசசெயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் எம்.துரைசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்
Post A Comment:
0 comments so far,add yours