மட்டக்களப்புமாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் பணியாற்றவுள்ள சிரேஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிவகுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் உதவித்தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தலைமையில்  (29.10.2019) காலை நடைபெற்றது.

பயிற்சிவகுப்பானதுஆரம்பக்கட்டமாக சிரேஸ்ட தலைமைதாங்கும் உத்தியோகத்தர்களுக்கு இரண்டு கட்டமாக நடை பெற்றுவருகின்றது.


காலையில் ஒருதொகுதியினருக்கும் மாலையில் அடுத்ததொகுதியினருக்கும் நடைபெற்றது.
தேர்தல் காலங்களில் உத்தியோகத்தர்கள் கடைப்பிடிக்கவேண்டியசட்டங்கள் வாக்காளருக்கு எவ்வாறானமுறையில் உதவுவது தொடர்பானவிளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன் அனைத்து உத்தியோகத்தர்களும் வாக்காளர்களுக்கும் போதுமான உதவிகளை செய்யவேண்டும் எனவும் காலநேரங்களுக்குவாக்;கெடுப்புநிலையங்கள் திறக்கப்படவேண்டும் ,அங்குஉரியகடமைப் பொறுப்புக்களைசரியானமுறையில் பங்கெடுக்கவேண்டும் எனவும் வேண்டப்பட்டது.

தேர்தல் திணைக்களத்தின் சட்டதிட்டங்களை குறிப்பாகவும் கடுமையாகவும் ,கண்டிப்பாகவும் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டுமெனவும் சகலஉத்தியோகத்தர்களைகண்காணிப்பதற்கெனசிரேஸ்ட தலைமைதாங்கும்உத்தியோகத்தர்கள் இருப்பதுடன் அவர்களின் கடமைகளைகண்காணிப்பதற்கு உதவிதெரிவத்தாட்சி உத்தியோகத்தர்கள் எனபலரது கண்காணிப்புடன் பணியாற்றல் வேண்டுமெனவும் தெரிவத்தாட்சிஉத்தியோகத்தர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் நேர்மையானதும், நீதியானதுமான தேர்தலை நடத்திமுடிப்பதற்குசகல உத்தியோகத்தர்களும்பங்களிப்பு செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours