இலங்கையில் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையில் வராலற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசாமி ஆலயத்தின் வருடார்ந்த உற்சவம் நடைபெற்று பின்னர் இறுதிநாளில் மட்டக்களப்பு வாவி சங்கமிக்கும் மூங்கிலாற்றில் உள்ள தீர்த்தக்கேணியில்; புண்ணிய தீர்த்தம் இடம்பெறுவது வழக்கம்.
இந்த புண்ணிய தீர்த்தம் இடம்பெறும் இடமானது அனைவராலும் ஒரு புண்ணிய பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீர்த்தக்கேணிற்கு அருகில் மண்டூர் போரதீவுப்பற்று பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்ட கோழிக்கடை வியாபாரி ஒருவர் நாளார்ந்தம் வெட்டப்படுகின்ற கோழிக்கழிவுகளை இந்த புனித பிரதேசத்தில் கொட்டிவருவது தெரியவந்துள்ளது.
எனவே இந்தப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதாரப்பரிசோதகர் மற்றும் பிரதேசசபையின் பொறுப்பதிகாரிகள்,விரைவில் நடவடிக்கை எடுப்பீர்களா என பிரதேச வாசிகள் வேண்டுகின்றனர்
Post A Comment:
0 comments so far,add yours