யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் நிலங்களை விடுவிப்பதற்கு இடையுறுகளையும் மறுப்பையும் தொடர்ந்து வெளியிடுட்டு வருவதால் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

ஊடகங்களில் யாழ். மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் படையினர் கைப்பற்றியுள்ள காணிகளை விடுப்பதற்கும் வேறு அரச காணிகளுக்குச் செல்லவும் இணங்கியிருந்தனர். இப்பொழுது மக்கள் காணிகளை விடுவிக்க மறுக்கின்றனர், என்றவாறு செய்திகள் வெளிவந்துள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக அந்தந்த மாவட்டங்களின் ஆளுநர்களும் அவ்வப்பகுதி மக்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருப்பவர்களும் படையினரும் (தளபதிகள்)கலந்து பேசி மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தன. சில இடங்களில் மக்கள் காணிகள் விடுவிக்கப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள தனியார் நிலங்கள் பலாலி கிழக்குப் பிரதேசத்தில் உள்ள தனியார் நிலங்களுட்பட்ட நிலங்களை விடுவிப்பதற்கு இணக்கங் காணப்பட்டது. இவ்விணக்கங்கள் வடமாகாண ஆளுநர், பாராளுமன்றப் பிரதிநிதிகள், படைகளின் பிரதிநிதிகள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்ட கூட்டங்களில் எட்டப்பட்டிருந்தன என்பது குறிப்பிடப்படவேண்டும். இப்பொழுது அரச படைத்தரப்பினர் தனியார் நிலங்களை விடுவிப்பதற்கு இடையுறுகளையும் மறுப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours