(த.தவக்குமார்)
மட்/பட்/வெல்லாவெளி கலைமகளில் சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின விழா இன்று பாடசாலை அதிபர் திரு.ச.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக போரதீவுப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.த.அருள்ராசா கலந்து கொள்ள சிறப்பு அதிதிகளாக பட்டிருப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர்களான திரு.த.நடேசமூர்த்தி, திரு.பா.வரதராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந் நிகழ்வில் முதியோர்கள், சிறுவர்கள் போன்றோர்களைக் கௌரவித்தும், பாராட்டியும்இ பரிசில்களும் வழங்கப்பட்டன. அதிபர், ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந் நிகழ்வுகள் குறித்த நேரத்திற்குத் திட்டமிடப்பட்டு நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் நடைபெற்றமை பாடசாலை அதிபரினதும், ஆசிரியர்களினதும் சிறப்பம்சமாகவே கருதப்படுகின்றது.







Share To:

Post A Comment:

0 comments so far,add yours