(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களால் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே எனும் தொனிப்பொருளில் கண்டன ஊர்வலம் நடாத்தப்பட்டது.


சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆரம்பபிரிவு மாணவர்களால் கண்டன ஊர்வலம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (1.10.2019)காலை 8.30 மணியளவில் நடாத்தப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கண்டன ஊர்வலமானது கல்லூரியில் இருந்து புறப்பட்டு நகரைச் சென்றடைந்து அங்கிருந்து மட்டக்களப்பு காந்தி பூங்காவரையும் சென்றடைந்து மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.இக்கண்டன ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.

"சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே", "எங்களுக்கு பெரும் சுமைகளை வழங்காதே" ,"சிறுவர்களாகிய எமக்கு சுதந்திரமாக வாழ இடமுண்டு", "சிறுவர்கள் நாங்கள்;எங்களுக்கு அன்பு காட்டுங்கள்", "நாங்கள் வருங்கால தலைவர்கள்", "நாங்கள் அடிமைகள் அல்ல சிறுவர்கள்" , "இலங்கையின் சிறுவர்களை பாதுகாக்க அரசு முனைப்புடன் செயற்படவேண்டும்", "இன்றைய சிறுவர்களை சட்டரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும்", "தயவு செய்து சகோதர சிறுவர்களுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என கண்டன ஊர்வலத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் பதாதையை தாங்கியவாறு ஊர்வலத்தில் ஈடுபட்டார்கள்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours