(தயாளன்)
தாயக விருட்சம் சுவிஸ் அமைப்பினுடைய ஏற்பாட்டில் பட்டிருப்புக் கல்விவலயத்திற்குட்பட்ட மண்டூர் 39 அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிபர் திருவருட்செல்வன் தலைமையில் நடைபெற்றது
இதன்போது சுவிஸ் ஆரோ ரெலியை சேர்ந்த ரமேஸ் அவர்களது அனுசரiயில் வசதி குறைந்த கச்சக் கொடி சுவாமிமலைப் பிரதேசத்தில் இருந்து 6 கிலோமீற்றர் தூரம் கால்நடையாக பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு துவிச் சக்கர வண்டி வழங்கிவைக்கப்பட்டது.


Post A Comment:
0 comments so far,add yours