(சா.நடனசபேசன்,எஸ்.துஸ்யந்தன்)
சமூகசேவைத் திணைக்களத்தின் தேசிய முதியோர் பராமரிப்புச் செயலகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணைக் கிராமத்தில் முதியோர் பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 4 ஆம்திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
20 இலட்சம் பெறுமதியான முதியோர் பராமரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கல்முனை வடக்குப் பிரதேசசெயலாளர் ஜெ.அதிசயராஜ் கல்முனை மாநகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான எஸ்.குபேரன்,சந்திரசேகரம் (ராஜன்),பொன்செல்வநாயகம் சிவலிங்கம் உட்பட பிரதேசசெயலக உத்தியோகத்தர் மற்றும் கிராமசேவகர்கள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours