ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி
(த.தவக்குமார்)
(த.தவக்குமார்)
நீண்டகாலங்களாக இந்த நாட்டிலே தீர்கப்படாமல் இருந்து வரும் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு உறுதியான தீர்வினைப் பெற்றுக்கொடுப்போம் என்று பொதுஜன பெரமுன கட்சியினர் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கூறிவரும் வேளை அண்மையில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையத்தினை திறப்பதற்கு தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கப்படதனை இனவாத போக்கினை வெளிப்படுத்தி விமர்சித்து வருகின்றார்கள். இப்படியானவர்கள் எப்படி தமிழ் மக்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பார்கள் என பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும் தேசிய கடதாசி கூட்டுதாபனத்தின் தலைவருமாக சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது அலுவலகத்தில் புத்தி ஜீவிகள்,கல்விமான்கள்,பொதுமக்கள் என பலரின் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
வட கிழக்கு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி, கௌரவ பிரதமமந்திரி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அவர்களும் உறுதியாக இருக்கின்றார்கள் இது தேர்தல் காலங்களில் கூறுகின்ற விடயம் மாத்திரமல்ல எங்களுடைய ஜனாதிபதி வேட்பாளர் அவர்கள் இன,மத,மொழி வேறுபாடுகள் இன்றி இந்த நாட்டு மக்களுக்கு சேவையாற்றக்கூடிய ஒரு சிறந்த மனிதர்
கடந்த காலங்களில் இவருடைய பணிகள்,சேவைகள் அபிவிருத்திகள் பற்றி நாங்கள் கூறத்தேவையில்லை அனைவரும் புரிந்திருப்பீர்கள் குறிப்பாக ஏழை,நலிவடைந்த மக்களின் துன்பங்கள் கஷ்ரங்களை இனங்கண்டு நேரடியாக சென்று சேவை செய்தவர். இவர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பாரிய விவசாய கிராமங்களை ஏற்படுத்தவுள்ளார் இந்நவிடயம் நாட்டில் பாரிய பசுமைப்புரட்சியை ஏற்படும் என்பதில் எவ்வித ஐயமில்லை.
விரைவில் இந்த நாட்டிலே பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தி அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக்கூடிய அமைதியான சூழலை ஏற்படும் ஒரு ஊழலற்ற கொள்கையுடைய சிறந்த மனிதனை நாங்கள் பெறுவோம் எனத் தெரிவிததார்


Post A Comment:
0 comments so far,add yours