(த.தவக்குமார்)
இலங்கை சமூகபாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மாவட்ட மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது
மட்டக்களப்பு மன்முனை வடக்கு டேபா மண்டபத்தில் கடந்த (17) மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை சமூகபாதுகாப்பு சபையின் தவிசாளர் மற்றும் சமூகபாதுகாப்பு சபையின் மாகாணப் பணிப்பாளர் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்
போரதீவுப்பற்று பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெறுவதற்கு முன்னின்று நெறிப்படுத்தி பங்களிப்பினை வழங்கியிருந்த பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் கணக்காளர் என் நாகேஸ்வரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் நிருவாக உத்தியோகத்தர் ரீ.உமாபதி மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இவர்களினால் நினைவுச் சின்னங்ககளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது படங்கள்




Post A Comment:
0 comments so far,add yours