(த.தவக்குமார்)
பிரதேச செயலக சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கள் மத்தியில் மறைந்துவரும் பாரம்பரியங்களை தெளிவுபடுத்தும் முகமாக 'குழந்தைகளின் உலகமும் முதியோர்களும் ' என்ற தொனிப்பொருளில் முதியோர்கள் தொடர்பான அறிவினை சிறுவர்களுக்கு வழங்குவதற்கும், முதியோர்கள் மற்றும் சிறுவர்கள் இடையிலான தொடர்பை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு காரைதீவு சண்முக மகா வித்தியாலயத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆண்டு 6 7 8 மாணவ மாணவிகளுக்கு பாடசாலை மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று (25) நடைபெற்றது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக தொற்றா நோய்கள் தொடர்பாகவும் அதனால் ஏற்படும் பாதிப்புக்களும் தொடர்பாக டாக்டர் எம். பிரசாத் அவர்களும் முதியோர் சமூகத்துக்குள் எப்படி வாழவேண்டும் என்ற அறிவினை திரு.என்.அருளானந்தம் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களும் மாணவர்களுக்கு விளக்கினார்கள்
இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவு உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.







Post A Comment:
0 comments so far,add yours