கே.கிலசன்
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் சோளன் பயிர்ச்செய்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்புழு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பிலாலிவேம்பு கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
காக்காச்சிவட்டை விவசாய போதனாசிரியர் ரீ.குகசோதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட தெற்கு வலய உதவி விவசாய பணிப்பாளர் ரீ.மேகராசா மறுவயற்பயிர்களுக்கான பாடவிதான உத்தியோகத்தர் என்.விவேகானந்தராஜா கிராம சேவகர் பி.இம்சன் ஆகியோரும் விவசாய போதனாசிரியர்கள் தொழிநுட்ப உதவியாளர்கள் மற்றும் பெருமளவான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த போகத்தில் அதிக சேதத்தை சோளச் செய்கையில் ஏற்படுத்திய படைப்புழு தாக்கம் இம்முறை பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் எவ்வாறான ஒருக்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளை பயன்படுத்த வேண்டுமென விவசாயிகளுக்கு தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Post A Comment:
0 comments so far,add yours