மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் அம்பிளாந்துறை ஊரில் அம்பிளாந்துறை திசைகாட்டி மையம் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை கனிஷ்டவித்தியாலயத்தில் கடந்த 2018,2019 ஆகிய ஆண்டுகளில் தரம் 5, புலமை பரிட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் சித்தியடைந்த மாணவர்களையும் 70, புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்ற மாணவர்களையும் இணைத்து சுமார் 64,மாணவர்களுக்கான பாராட்டும் விழா இன்று 12/10/2019, சனிக்கிழமை பி.ப:2.30, மணிக்கு அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலய மண்டபத்தில் அம்பிளாந்துறை திசைகாட்டி மையத்தின் தலைவர் பு.புவனகாந்தன் தலைமையில் இடம்பெற்றது,
ATM, விருது எனும் பெயரில் பாராட்டி நினைவுச்சின்னங்களும் பரிசில் பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் சி.ஶ்ரீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவரும், அம்பிளாந்துறை கனிஷ்ட வித்தியாலய நிறுவுனருமான பா.அரியநேத்திரன் கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக அம்பிளாந்துறை கலைமகள் மகாவித்தியாலய முதல்வர் சு.தேவராசன்,அம்பிளாந்துறை கனிஷ்ட வித்தியாலய முதல்வர் க.அரசரெட்ணம், பிரதேசசபை உறுப்பினர் செ.நகுலேஷ்வரன்,
பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர்களான க.கேசகப்போடி, கோகுலரஞ்சன், ஆசிரியர்களான திருமதி சந்திரலீலா மா.ஜீவரெட்ணம், அழகு தனு,கோணேஷ்வரன், க.விவேகானந்தன்,கற்சேனை வித்தியாலய அதிபர் க.சிறிதரன், கதிரவன் விளையாட்டு கழக தலைவர் கு.நமசிவாயம், உட்பட பல பொது அமைப்புக்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது அம்பிளாந்துறை கனிஷ்ட வித்தியாலய அதிபர் க.அரசரெட்ணம் மற்றும் ஆசியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டு சின்னங்கள் வழங்கப்பட்டன.
கற்சேனை அதிபர் க.சிறிதரனுக்கும் பொன்னாடை அணிவித்து பாராட்டப்பெற்றார்.
மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் சி.சிறிதரனுக்கும் பொன்னாடை அணிவித்து நினைவுச்சின்னம் வழங்கி அவரை பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
இதன்போது அங்கு உரைநிகழ்த்திய வலய கல்விப்பணிப்பீளர் சி.சிறிதரன் 5,ம் தரம் புலமை பரிட்சை பெறுபேறு வெளியிடப்பட்டு ஆறு நாட்களுக்குள் இவ்வாறான பெரும் பாராட்டு விழாவை அம்பிளாந்துறை திசைகாட்டி மையம் செய்துள்ளமையை வெகுவாக பாராட்டினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறு குறுகிய காலத்தில் இவ வாறு நன்கு திட்டமிட்டு இந்த பாராட்டுவிழாவை நடத்திய அம்பிளாந்துறை திசைகாட்டி மையம் மென்மேலும் கல்விக்காக மேலும் திணைகாட்டவேண்டும் அதற்கு எல்லாம்வல்ல இறையருள் என்றும் அம்பிளாந்துறை திசைகாட்டி மையத்துக்கு கிடைக்க எம்மெருமான் துணைபுரிவார் என கூறினார்.









Post A Comment:
0 comments so far,add yours