வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்ட மண்டூர்,குருமன்வெளி வாவியினூடாக இயங்கி வரும் இயந்திரப்படகின் இரும்புத் தட்டிகள் அண்மைக்காலங்களாக சேதமடைந்திருந்த நிலையில் வீதி அபிவருத்தி திணைக்களத்தின் அனுமதியுடன் திருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.
இந்தப் இயந்திரப்படகில் இருந்து கழற்றப்பட்ட இரும்பு தட்டிகள் குருமன்வெளி இயந்திரப்படகு தரிப்பிடத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பாதுகாப்பின் கீழ் கண்காணிக்கப்பட்டு வந்திருந்தது.
இந்த பாவனையற்று வைக்கப்பட்டிருந்த இரும்பு தட்டிகள் கடந்த மாதம் 21,22ஆம் திகதிகளில் இரும்புகளை கொள்வனவு செய்யும் நபர்களுக்கு துண்டாடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனுடைய நிறையானது சுமார் 6000 கிலோ மதிக்கதக்க நிறையுடைதாகவும் இதனை தற்போது இயந்திரப்படகு வேவையினை பொறுப்பேற்றுள்ள ஓப்பந்தக்காரர் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விடயம் பற்றிய விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருதாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.அரச சொத்துக்களை தங்களின் தேவைக்காக விற்பனை செய்யும் தனிநபர்களோ,ஒப்பந்தக்காரர்களோ அவர்களுக்கு எதிரான தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours