ச.குமணன்
அம்பாறை .
அம்பாரை மாவட்டத்தின் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற்கரை பிரதேசங்கள் கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டு கடற்றொழிலை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிடிருப்பதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நிந்தவூர் கடற்கரை பிரதேசம் வெகுவாக பாதிக்கப்பட்டுவருகின்றமையினால் கடற்கரையை அண்டிய பகுதியில் உள்ள மீனவ வாடிகள் மற்றும் கடற்க்கரை பகுதியில் உள்ள தென்னை மரங்கள் கடல் அரிப்பினால் கடலினுள் இழுத்து செல்லப்பட்டுள்ளன.
இவ் கடலரிப்பு குறித்து அரசியல் வாதிகளுக்கும் துறைசார் அதிகாரிகளுக்கும் பல தடவை மக்கள் தெரிய படுத்தியும் பாராமுகமாக இருப்பதாக அப் பகுதி வாழ் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours