(த.தவக்குமார்)
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயத்தில் இவ்வருடம் 2019 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய15 பிள்ளைகள் 100% சித்திபெற்றுள்ளார்கள்.
இதில் 08 பிள்ளைகள் புலமைப்பரிசில் பெற தகுதி பெற்றுள்ளார்கள் பிரத்தியேக வகுப்புக்கள் எதுவுமின்றி இச்சாதனை மிகவும் அதிகஸ்ரப் பிரதேச பாடசாலையில் நிகழ்த்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். லி.ஜிகான்-179,ச.டிதர்சன்-179,அஅபினயா-171,சகிந்துசா-169,த.ஜனுஸ்கா-167,ச.சிகாஜன்-161,த.பவளுஜன்-158,ஜெ.கேதீஸ்-153

இச்சாதனைக்கு உறுதுணையாக திகழ்ந்த தரம்  ஆசிரியை திருமதி.சறோசாதேவி பிரியநாயகம் மற்றும் தனது பிள்ளைகள் போன்று தனது முழுநேரத்தினையும் பிள்ளைகளோடு செலவிட்டு இந்த வரலாற்றுச் சாதனையின் காதாநாயகி தரம்  வரையிலும் கற்பித்த செல்வி வைத்தியலிங்கம் கங்காதேவி ஆசிரியை அவர்களையும் இந்த சாதனைக்கு உறுதுணையாக விளங்கிய ஆனைகட்டியவெளி நாமகள் வித்தியாலயத்தின் அதிபர் ஆசிரியர் குழாத்திற்கும் பெற்றோர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


Share To:

Post A Comment:

0 comments so far,add yours