(சா.நடனசபேசன்)

தமிழ்தேசிய கூட்டமைப்பை பற்றியோ அதன் தலைவர் சம்மந்தன் ஐயாவை பற்றியோ தென்பகுதியில் உள்ள சிங்கள கூத்தாடிகள் யாரும் விமர்சிப்பதற்கு அருகதை இல்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழ் அரசுகட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஷபக்ச தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீபாவளிக்கு தீர்வு தருவோம் என்று மட்டும்தான் சொல்லுவார்கள். ஐந்தாவது தீபாவளியும் வந்துவிட்டது. சம்பந்தன் அடுத்ததாக என்ன சொல்லலாம் என சிந்தித்துக் கொண்டிருக்கின்றார். சுமந்திரன் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சத்துடனேயே செயற்படுகின்றனர் என பேசியது தொடர்பாக ஊடகவியலாளர் கேட்டபோது அதற்கு பதில் கூறிய அரியநேத்திரன் மேலும் கூறுகையில்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு தொடர்பாக கேள்வி கேட்பதற்கும் விமர்சிப்பதற்கும் வாக்களித்த வடக்கு கிழக்கு தமிழ்மக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.
தென்பகுதியில் உள்ள சிங்கள அரசியல் வாதிகளுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை பற்றி விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை கடந்த 71,வருடங்களாக எமது மக்களை ஏமாற்றி எம்மை இனப்படுகொலை செய்த வாரிசுகள் இன்று எமது மண்ணில் வந்து எமது தமிழ் தலைமைகளை பற்றி பிழையாக விமர்சிப்பது ஏற்கமுடியாது.

சம்மந்தன் ஐயா தீபாவளிக்கு பொங்கலுக்கு இடையில் தீர்வுவரும் என்று கூறியது உண்மைதான் சிங்கள தலைமைகளை நம்பித்தான் அவர் கூறினார் ஒரு இனத்தை வழிநடத்தும் அரசியல் கட்சி தலைமை தமது மக்களை நம்பிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக கால எல்லைகளை குறித்து நம்பிக்கை ஈட்டுவதற்காக இவ்வாறு கூறுவது ஒன்றும் புதிதல்லை.

ஏன் நாமல் ராஷக்க்சவின் தந்தையார் மகிந்த ராஷபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது தமிழ்மக்களுக்கு பதின்மூற்றுக்கு மேல்(13+) அரசியல் ஆதிகாரம் தருவதாக கூறினார் அல்லவா அதை தந்தாரா? தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றி முள்ளிவாய்காலில் அப்பாவி மக்களை கொன்று குவித்ததல்லவா வரலாறு?

தேர்தலில் ஜனநாயக ரீதியாக யாருக்கும் வாக்களிக்க எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு,அதுபோலவே எந்த கட்சி உறுப்பினர்களும் பிரசாரம் எந்த இடத்திலும் சென்று மேற்கொள்ள உரிமை உண்டு அதற்காக கீழ்த்தரமான விமர்சனங்களை தமிழ்தேசியகூட்டமைப்பு மீது அவதூறான அநாகரீக வார்த்தைகளை கூறுவதற்கு எந்த கட்சி சிங்கள தலைமைகளுக்கும் அருகதை இல்லை அந்த கருத்தை கூறும் சிங்கள தலைமைகளும் அவர்களின் வாரிசுகளும் ஒருதடவை நெஞ்சில் கையைவைத்து மனச்சாட்சியை்தொட்டு சொல்லுங்கள் இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்த அனைத்து சிங்கள ஆட்சி தலைவர்கள் விட்ட தவறுகள் ஏமாற்ற ங்கள் இனப்படுகொலைகள் பாரபட்சங்கள் காரணமாகத்தான் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இன்றுவரையும் சுதந்திரம் இல்லாத அடிமைகளாக வாழ்கிறார்கள்.

அடிமைதன்மையில் இருந்து விடுதலை பெறுவதற்காகவே தந்தை செல்வாவால் தொடங்கப்பட்ட அகிம்சைரீதியான போராட்டம் ஆரம்பித்து அதைகூட சிங்கள தலைமைகள் பல ஒப்பந்தங்களை செய்து ஏமாற்றப்பட்டதன் காரணமாகவே வேறு வழி இன்றி இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது நாமல்ராஷபக்சவின் பாட்டன் பூட்டன் காலத்தில் தமிழர்களுக்கு தீர்வு அரசியல் தீர்வு கிடைத்திருப்பின் விடுதலைபுலிகள் உருவாகி இருக்கமாட்டார்கள் அந்த போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009,மே,18,க்குப்பின் தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு சம்மந்தன் ஐயா தலைமையில் எமக்கான அரசியல் தீர்வை பெறும் முயற்சியில் அரசியல் செயல்பாடுகளை தேசியரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் முன்எடுக்கப்படுகிறது.

நாமல் ராஷபக்ச வின் தந்தையார் மகிந்த ராஷபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது 2012ம் ஆண்டு ஜனவரிமாதம் தொடக்கம் டிசம்பர் வரையும் ஏறக்குறைய 18, தடவை தமிழ்தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சினை தொடர்பாக பேசியபோது அதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை யார் ஏமாற்றியது உங்கள் தந்தை அல்லவா?

வரலாறுகளை மீட்டுபாருங்கள் கடந்த கால தவறுகளை விட்டவர்கள் தமிழ் தலைமை இல்லை சிங்கள தலைமைகள்தான் அதற்காக ஐ.தே.கட்சி யோ க்கியமான கட்சி என்றோ யோக்கியமான தலைமை என்றோ நான் கூறவில்லை எமக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஏமாற்றியவர்கள் இனப்படுகொலை செய்தவர்கள் இரண்டு கட்சிக்கும் பங்குண்டு.

வடக்கு கிழக்கு தமிழ்மக்களை கொன்று குவித்து விட்டு அவர்களை புதைத்த மண்மேடுகள் மீது ஏறி நின்று தமிழ் தலைவர்களுக்கு விரல் நீட்ட எந்த சிங்கள தலைவர்களுக்கும் உரிமையோ அருகதையோ இல்லை.

யாரும் வாருங்கள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளுங்கள் அதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் விமர்சிப்பதற்கு நீங்கள் பொருத்தமானவர்கள் இல்லை உங்கள் பரம்பரைகள் சரியாக நடந்திருந்தால் நாம் இன்று இத்தனை இழப்புக்களை சந்தித்திருப்போமா என்பதை ஒருகணம் சிந்தித்துவிட்டு எமக்கு விரல் நீட்டுங்கள்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு மட்டுமே இப்போது சிங்கள அரசியல்வாதிகள் முஷ்லிம் அரசியல் வாதிகள் மலையக அரசியல் வாதிகள் தமிழ் துணைபடையாக செயல்பட்டவர்கள் துரோகிகள் எல்லோரும் விமர்சனம் இலகுவாக செய்ய கூடிய ஒரு கட்சி என்றால் அதன் ஜனநாயக பலம் எவ்வாறானது என்பது ஒருவகையில் நிருபிக்கின்றது எனவும் மேலும் கூறினார்.  
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours