(க. விஜயரெத்தினம்)
பிள்ளையானை விடுதலையை உறுதி செய்வதற்கும்,கிழக்கின் அபிவிருத்தியை எழுச்சியுடன் மாற்றுவதற்கும் மொட்டுச்சின்னத்துக்கு அருகில் புள்ளடியிடுங்கள்.எம்பிலிப்பிட்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிள்ளையானை இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை(பிள்ளையான்)எதிர் க்கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று(27) காலை 10.35மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற பொது ஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்றைய தினம் மட்டக்களப்பு வாழைச்சேனையில் நடந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகைதந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பாசிக்குடாவில் தங்கியிருந்து தங்களது ஆதரவாளர்களை சந்தித்ததுடன் இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று பிள்ளையானை சந்தித்திருந்தார்.இச்சந்திப்பி ல் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 13 கட்சிகள் பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்சவை ஆதரித்து பிரசாரம் செய்து வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் மட்டக்களப்பில் தங்கிருந்து மட்டக்களப்பு சிறைக்குச் சென்று பிள்ளையானை சந்தித்தார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கருத்து தெரிவிக்கையில் ...
தமிழீழ விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு கிழக்குத் தமிழ்மக்கள் ஜனநாய நீரோட்டத்திற்கு திரும்பினார்கள்.ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த தம்பி பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கி கிழக்குத் தமிழ்மக்களையும்,கிழக்கையும் பொருளாதாரத்திலும்,அபிவிருத்தி யிலும் முன்னேற்றுவதற்கு ஏற்படுத்திக்கொடுத்தேன்.பிள்ளை யானுக்கு பின்னாள் தமிழ்மக்கள் அணிதிரண்டார்கள்.இதனை பொறுத்துக்கொள்ளாத தமிழ்தேசிய தலைமைகள் பிள்ளையானை பிடித்து சிறையில் அடைத்தது.இதற்கு நல்லாட்சி அரசாங்கம்தான் காரணமாகும்.ஒரு பிள்ளையானை அடைத்து வைத்தாலும் ஓராயிரம் பிள்ளையான் கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.இன்று பிள்ளையானின் தலைமைத்துவத்தால் தமிழ்தேசிய கூட்டமைப்பை கிழக்கு தமிழ்மக்கள் நிராகரித்து விட்டார்கள்.நாட்டில் உள்ள மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நாங்கள் ஆட்சியமைப்போம்.
எங்களுடைய ஆட்சியில் விவசாயிகள் அதிகம் நன்மையடைந்தார்கள்.உரமானியம் விவசாயிகளுக்கு வழங்கினோம்.விவசாயத்துறை வளர்ச்சி கண்டது.விவசாயத்தினால் நாடு முன்னேற்றம் கண்டது.
நல்லாட்சி அரசாங்கத்தால் பட்டத்தாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் குறைவுதான்.பாலூட்டும் பட்டதாரிகள் தமது குழந்தைகளுடன் வீதியில் 150நாட்களுக்கு மேல் போராடினார்கள்.போராட்டத்தில் ஈடுபட்டும் வேலைவாய்ப்பு வழங்க அரசாங்கத்திடம் திட்டமில்லை.எனது ஆட்சிக்காலத்தில் 50,000மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்தோம்.மக்களை நிம்மதியாக வாழவைத்தோம்.என்னுடைய ஆட்சிபோல் நல்லாட்சி அரசாங்கத்தில் இல்லை. இந்தநாட்டு மக்கள் நல்லாட்சி அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.வடகிழக் கில் வாக்களித்த தமிழ்மக்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒன்றும் செய்யல்லை.இதனை தமிழ்மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
நாங்கள் ஆட்சியமைப்போம்.நாட்டு மக்கள் எங்கள் பக்கமுள்ளனர்.மொட்டு ஆட்சியை ஏற்படுத்தி நாட்டிலே அனைத்து இனமக்களும் ஒற்றுமையாகவும்,சகோதரத்துவத்து டன் வாழ்வதற்கு வழிகாட்டுவோம்.ஐக்கிய தேசிய கட்சியின் போலித்தனத்தை மக்கள் அறிந்துகொண்டுள்ளனர்.தமிழ்மக் களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மொட்டுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள்.ஒட்டுமொத்த நாட்டுமக்கள் மொட்டுச் சின்னத்தை இதயத்தில் நிலைநிறுத்தியுள்ளார்கள்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் கைது செய்து அடைத்து வைத்த பிள்ளையானை விடுதலையை உறுதி செய்வதற்கும்,கிழக்கின் அபிவிருத்தியை எழுச்சியுடன் மாற்றுவதற்கு மொட்டுச்சின்னத்துக்கு அருகில் புள்ளடியிடுங்கள்.எம்பிலிப்பிட் டிய தேர்தல் முடிவுகள் போன்று ஜனாதிபதி தேர்தலில் மொட்டின் முடிவுகள் நாட்டை இறையாண்மையை பாதுகாத்து மூவின மக்களையும் பாதுகாக்க வழிவகுக்கும் தெரிவித்தார்.

Post A Comment:
0 comments so far,add yours