(த.தவக்குமார்)
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு போரதீவுபற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதியோர் தின விழா நேற்று வியாழக்கிழமை கலாச்சார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் அவர்கள் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் கணக்காளர் என்.நாகேஸ்வரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் நிருவாக உத்தியோகத்தர் ரீ.உமாபதி பிரண்டினா நிறுவனம்; போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி புணர்வாழ்வு நிறுவனம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் முதியோர்கள் பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது முதியோர;களின்; கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதோடு அவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஆரம்ப கைத்தொழில் சமூக சேவை மற்றும் வலுவூட்டல் அமைச்சினால் முதியோர் செயலகத்திற்கு 2.5 மில்லியன்; நிதி ஒதுக்கீட்டில் முதியோர்களுக்கான பகல் நேர தங்குமிடத்துக்கான அடிக்கல் நடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.










Share To:

Post A Comment:

0 comments so far,add yours