(பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம் )
இலங்கையில் தீவில் இடம்பெற்ற உண்மைத்தன்மைகளை உலகறியச் செய்வதற்கு ஊடகத்துறையில் இரவு பகலாக உழைத்து படுகொலை செய்யப்பட்ட ஈழத்து தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கூறும் நிகழ்வும் கருத்தரங்கும் நேற்று 20 பிரான்ஸ் நாட்டில் நடைபெற்றது.
இந் நிகழ்வினை லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று ( 20) மாலை 3 மணியளவில் இலங்கையில் படு கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை தூவி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்கள் கைதுகள். படுகொலைகள் சித்திரவதைகள் , இன்றைய தமிழ் தேசிய அரசியலும் தமிழ் ஊடகவியலாளர்களும் என்ற தொனிப்பொருளில் சிறப்புரைகளும்.
மற்றும் புலம்பெயர் ஈழத்தமிழ் ஊடகங்களும் அதன் நோக்கு நிலையும் ஈழப்போராட்டத்தில் ஆகுதியான ஊடகர்களும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களும் யுத்தத்திற்கு பின்னரான மனித உரிமைகள் அறிக்கையிடலில்
தமிழ் ஊடகங்களின் வகிபாகம் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் சர்வதேச ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகள். ஊடகங்கள் உண்மைக்கான போராட்டத்தில் வெற்றியும் தோல்வியும் என்ற தொனிப்பொருளிலில் ஊடகவியலாளர்களான சன்..தவராசா பாலச்சந்திரன் சுதன்ராஜ் துரைசிங்கம் இரா.தில்லைநாயகம். யோகரட்ணம். செல்வரெத்தினம் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் (தராக்கி) அவர்களின் ஆவணப்பட வெளியீடும் மற்றும் உதயன் பத்திரிகை ஆசிரியராக இருந்து சேவையாற்றிய ஞானசுந்தரம் குகநாதன் அவர்களின் ஊடக சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் விளக்க உரையினை கோபிரெடணமும் வரவேற்பு உரையினை ஒன்றியத்தின் செயலாளர் குகன் . குழு விவாத ஒழுங்கமைப்பினை பிரேம் சிவகுரு மற்றும் குகநாதனுக்கான விருதினை நிருவாகசபை உறுப்பினர் கந்தசாமி அவர்கள் வழங்கி வைத்த மையும் குறிப்பிடத்தக்கது.







Post A Comment:
0 comments so far,add yours