(காரைதீவு நிருபர் சகா) 

நெருக்கீடுகள் நிறைந்த சமகாலத்தில் அவற்றிலிருந்துவிடுபட பல ஆற்றுப்படுத்தல்களை நாடுகிறான்.திரைப்படம் முகநூல் ஆடல்பாடல் எனப்பலகையின. சிலவேளைகளில் அவையும் நெருக்கீடுகளை தோற்றுவித்துவிடுகின்றன. மாறாக நல்லநூல்கள் எம்மைவழிப்படுத்துகின்றன. அந்தவகையில் சாஹித்தியமண்டல எழுத்தாளர் கியாஸின் நூல் வாழ்வியல்அர்த்தம் பொதிந்த சிறந்த நூல் என்பதில் ஜயமில்லை.

இவ்வாறு சாஹித்தியமண்டலப்பரிசு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளர் அ.ஸ.அகமட் கியாஸைப் பாராட்டிக்கௌரவிக்கும் விழாவில் உரையாற்றிய சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீம் புகழாரம் சூட்டினார்.
எல்லாப்பூக்களுமே அழகுதான் என்ற எழுத்தாளர் அஹமட் கியாஸின் நூல் அண்மையில் சாஹித்தியமண்டலவிருது பெற்றமை தெரிந்ததே.

சம்மாந்துறை லயத்தில்பிரதிக்கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றிவரும் அஹமட் கியாஸ் வலயக்கல்விப்பணிமனை கல்விச்சமுகத்தால் பாராட்டிக்கௌரவிக்கப்பட்ட விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர்எம்.எஸ்.எஸ்.அமீர்தலைமையில்நடைபெற்றவிழாவில்அவர்மேலும்பேசியதாவது:

ஒரு விடயம் பாராட்டப்படும்போதுதான்அதன்பெறுமதி விளங்குகிறது. நண்பர் கியாஸ் எழுதிய யன்னலைத்திற எனும்நூலும்எல்லாப்பூக்களுமேஅழகுதான் என்ற நூலும்கனதியானவை. அதற்கு அவரது  பரம்பரை மற்றது சூழல் காரணமாகலாம். அவரது தந்தை நாடறிந்த எழுத்தாளர் அ.ஸ.அப்துல்சமது. அந்த 23சோடி நிறமூர்த்தம் கடத்தப்படிருக்கிறது. மற்றது அவர் வாழ்ந்த இலக்கியசூழல்.
வேலைப்பழுக்களுக்கு மத்தியில்அவர்இலக்கிய உலகில்இத்துணை பிரகாசிப்பதுசாதனையாகபார்க்கப்படவேண்டியது. 

அவரதுஅந்த நூல் வெளியீட்டுவிழாவேஅதற்கு சாட்சியாகும்.
பெண்களால் கவிஞராக இலக்கியவாதிகளாக  மாறியோர் அதிகம். அந்தவகையில் கியாஸ் அடுத்தநூல் நிச்சயம் அதனைத்தழுவியதாக அமையலாம் எனலாம்.
வலய நிருவாக உத்தியோகத்தர் எம்.ஜ.எம்.முஸரப் பிரதிக்கல்விப்பணிப்பாளர் செல்வி வி.நிதர்சினி ஆகியோரும் புகழுரையாற்றினர்.

ஏற்புரைவழங்கிய எழுத்தாளர் கியாஸ் கூறியதாவது:
எனது தந்தையார் அ.ஸ. தனது 10வது நூலில்தான் சாஹித்தியவிருது பெற்றார். இறையருளால் எனது 2வது நூலுக்கு அந்த விருது கிடைக்கப்பெற்றது. கொழும்பில் ஜனாதிபதி கையால் இவ்விருது கிடைக்கப்பெற்றாலும் எனது சமுகம் இந்த பாராட்டைச்செய்கின்றபோது இதனைப்பெருமையாககருதுகிறேன் என்றார்.


விழாவில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள் எம்.எச்.எம்.ஜாபீர் உள்ளிட்ட கல்விஅதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். 





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours