(த.தவக்குமார்)
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு போரதீவுப்பற்று சிறுவர்தினம் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி; தலைமையில் நேற்று வெல்லாவெளி சக்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஒக்டோபர் 01 நடைபெற்றது.
இந்நிகழ்வில் கதா நாயகர்களாகிய சிறுவர்களை கௌரவித்தும் பாராட்டியும் பரிசுகளும் வழங்கப்பட்டு பசுந்தளிர் 05வது சிறப்பு மலரும் வெளியிடப்பட்டிருந்தது
எதிர்காலத்து பிரஜைகளாகிய சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என பிரதம அதிதியாக கலந்த கொண்டு சிறப்பித்த மட்டக்களப்பு மாவட்ட உதவி செலாளார் ஆர்.நவேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்
இந்நிகழ்வின்போது சிறப்பதிதிகளாக போரதீவுப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி ரீ.அருள்ராஜா வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி று.ஆ.ஆனந்தசிறி பாடசாலை அதிபர்கள்; மக்கள் வங்கி இலங்கைவங்கி முகாமையாளர்கள் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்தி புணர்வாள்வு நிறுவனம் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பட்டதாரி பயிலுனர்கள் பாடசாலை மாணவர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்
சர்வதேச நிகழ்வை முன்னிட்டு ஆக்கங்களை வழங்கி மாணவர்களுக்கு பரிசில்களும் சிறுவர்களுக்கான பல விளையாட்டு நிகழ்வுகளான பணிஸ் சாப்பிடுதல் போத்தலில் பந்தை வைத்தல் மிட்டாய் சாப்பிடதல் தட்டில் உள்ள மிட்டாய் ஊதி எடுத்து வேறு பாத்திரத்தில் வைத்தல் போத்தலில் நீர் நிரப்புதல் பலூனுதி பாத்திரம் விழுத்துதல் போன்ற பல சிறுவர்களுக்கான நிகழ்வகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours