(த.தவக்குமார்)
காரைதீவு சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வாணி விழா ' நிகழ்வுகள் காரைதீவு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.எஸ்.சதீஷ் அவர்களின் தலைமையில் இன்று (08) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெக ராஜன் அவர்கள் கலந்து கொண்டார்கள் மற்றும் இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலக சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஜனாப் எம்.எம்.அச்சு முஹம்மட் அவர்களும் சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஜனாப். ஏ. எல்.ஏ ஹமீட் அவர்களும் மற்றும் பிரிவுகளுக்கு பொறுப்பான சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இதன்போது பிரதேச செயலாளர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் தொடர்ந்து
2019 ஆம் ஆண்டுக்கான 'திரியமாதா ' சேமிப்பு கணக்கில் அதிக பணத்தை சேமிப்பு செய்த சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.















Share To:

Post A Comment:

0 comments so far,add yours