(க.விஜயரெத்தினம்)
தமிழர்களின் அடையாளத்தையும்,ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்த தமிழ்மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்
என இரா.சாணாக்கியன் தெரிவிப்பு.


தமிழர்களின் அடையாளத்தினையும்,நாட்டினுடைய ஜனநாயகத்தினையும் பாதுகாக்ககூடிய ஒரெயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பேயாகும்.அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் நாங்கள் ஒன்றுபட்டு செல்லவேண்டும்.தமிழ்மக்கள் ஒற்றுமையுடன் பயணித்தால்தான் தமிழ்மக்களின்  நீண்டகால பிரச்சனைக்கு தீர்வுகளை எட்டமுடியும்.என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட எருவில் பகுதியில் உள்ள விளையாட்டு கழகங்களின் வளர்ச்சிக்காக விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
எருவில் இளைஞர்கழகம் உதயநிலா கலைக்கழம் மற்றும் கண்ணகி விளையாட்டுக்கழகங்களுக்கு இந்த விளையாட்டு உபகரணங்கள் ஞாயிற்றுக்கிழமை(27)மாலை வழங்கிவைக்கப்பட்டன.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் இந்த விளையாட்டு உபரகணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதனை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று மாலை உதயநிலா கலைக்கழக தவைவர் சு.துஸியந்தன் தலையில் இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியனும்,சிறப்பு அதிதிகளக எருவில் கண்ணகி அம்மன் ஆலய தலைவர் மா.சுந்தரலிங்கமும் சமாதான நீதவான் ச.பேரின்பநாயமும் கலந்து கொண்டார்கள்.

குறித்த விளையாட்டுக்கழகங்கள் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த விளையாட்டு உபகரணம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த சாணக்கியன்,
தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்றும் வகையிலான முடிவுகளையே ஆளும் கட்சி எடுக்கும்.பெரும்பான்மை கட்சிகளை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் வாக்குகள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மட்டுமே தேவைப்படும்.இந்த நாட்டில் ஜனாதிபதியை தீர்மானிப்பது சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளாகும்.ஜனாதிபதி தேர்தல் வரும்போது பல்வேறுபட்ட சலுகைகளை வழங்கும் நிலைகாணப்படும்.கடந்த காலத்தில் அவ்வாறான சலுகைகளை பெற்றுவழங்கியுள்ளேன்.இருந்தபோதிலும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகளை காப்பாற்றமாட்டார்கள்.

2014ஆம் ஆண்டு பல வாக்குறுதிகளை வழங்கியபோதிலும் எந்த வாக்குறுதிகளும் தமிழ் பிரதேசங்களில் நிறைவேற்றப்படவில்லை.ஆனால் சகோதர இனத்தவர்களுக்கு அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சகோதர இனத்தவர்களுக்கு வழங்குபவற்றை தட்டிப்பறித்து தருவோம் வாக்களியுங்கள் என்று எமது சிலர் சில வேட்பாளர்களுக்காக பிரசாரங்களை மேற்கொண்டுவருகின்றனர்.அது எந்தவிதத்திலும் சாத்தியப்படாத விடயம்.ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய பாராளுமன்ற தேர்தல் வரும்போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகத்தினை மீறி செயற்படமாட்டார்.

அந்தவகையில் இன்று தமிழ் மக்களை ஏமாற்றுவதை விடுத்து தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் ஒரு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வது என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே பெற்றுக்கொள்ளமுடியும்.

தமிழர்கள் தங்களது அடையாளத்தினையும்,ஜனநாயகத்தினையும் பாதுகாக்கப்படவேண்டும்.தமிழர்களின் அடையாளம்,ஜனநாயகத்தினையும் பாதுகாக்ககூடிய ஒரெயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமேயாகும்.அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் நாங்கள் ஒன்றுபட்டு செல்லவேண்டும்.நாங்கள் பிரிந்துநிற்போமானால் அது சகோதர இனத்தின் பலமாக மாறும் நிலையேற்படும்.ஒரு சில அரசியல்வாதிகள் தங்களது சுயலாபங்களுக்காக செயற்பட்டுவருகின்றனர்.

இன்றைய இளைஞர்களுக்கு கடந்தகால வரலாறுகள் தெரியாத நிலையுள்ளது.கடந்த காலத்தில் தமிழினத்திற்கு எதிராக நடந்த வன்முறைகள்,கஸ்டங்கள் எதிர்காலத்திலும் அனுபவிக்ககூடாது என்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தமிழ் தேசியம் என்றதில் உறுதியாக இருக்கும்போது மட்டுமே முடியும்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours