80 மணித்தியாலத்திற்கு மேற்பட்ட மீட்பு பணி தோல்வியில் முடிவடைந்த நிலையில் சிறுவன் சுர்ஜித் உயிரிழந்துவிட்டான் என அறிவிக்கப்பட்ட செய்தி அனைவருக்கும் பேரிடியாய் வந்து விழுந்தது.
இந்நிலையில் தற்போது சிறுவன் சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
சுர்ஜிதின் உடல் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இறந்துவிட்டதாக மருத்துவ குழு தகவல் என மீட்பு பணியில் ஈடுபட்ட வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனை இன்று (ஒக்.29) அதிகாலை 2.20 மணிக்கு தெரிவித்தார்.
உடல் சிதைந்து இருப்பதாகவும் இரவு 10.30 மணியில் இருந்தே துர்நாற்றம் வீசியதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது சிறுவன் சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours