(மண்டூர் நிருபர் தவக்குமார்)
வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பிரதேசத்தில் ஒரு தொகை பசு மாடுகளை விற்பனைக்காக அனுமதிப்பத்திர முறையினை மீறி ஏற்றித் சென்ற சிறிய ரக வாகனம் பசுமாடுகள் நேற்று கைப்பற்றப்பட்டள்ளதாக பொலிஸார் தொரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது

குறித்த பிரதேசத்தில் வைத்து அனுமதிப்பத்திரம் இருந்தும் மிருகங்களை வதைத்து சிறியரக வாகனத்தில் அதிகாமான பசு மாடுகளை ஏற்றிச் சென்றவேளை மாடுகள் மற்றும் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.கைப்பற்றப்பட்ட மாடுகள் மற்றும் வாகன சாரதி இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.





Share To:

Post A Comment:

0 comments so far,add yours