(எம்.எம்.ஜபீர்)
வனரோபா  மரநடுகை மாதத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தினால் சம்மாந்துறை பிரதேசத்தினை அழகுபடுத்தும் நோக்கில் மரம் நடுகை நிகழ்வு ஆடைத் தொழிற்ச்சாலை வளாகத்தில் நேற்று இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மரநடுகை வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபை, நீர்பாசனத் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆகிய இணைந்து இவ்மரநடுகை வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் ஆர்.நெடுஞ்செலியன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.உதயராஜன், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சம்மாந்துறை பிரதேச  நீர்பாசன பொறியிலாளர் எம்.எச்.எம்.நவாஸ், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.ஆஷிக், மாவட்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.நாஹீத், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours