(த.தவக்குமார்)
தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் 'கடந்த காலத்தை குணப்படுத்தி எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்' எனும் தொனிப்பொருளிலான கிராம மட்ட விளையாட்டு கழகங்கள், இளைஞர் அமைப்பின் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான நல்லிணக்கம் தொடர்பான ஆக்கத்திறன் மிக்க கலந்துரையாடல் மற்றும் செயலமர்வு நிகழ்வு பிரதேச செயலகம் மற்றும் தேசிய இனங்களுக்கிடையிலான நட்பு அமைப்பு இணைந்து இன்று (01) காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடாத்தியது.
இந்நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நகழ்வின் பிரதேச இணைப்பாளராக பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் திரு.குரூஸ் குணரத்தினம் அவர்களும்இ வளவாளர்களாக மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. பி.ஜெனிதா அவர்களும், தேசிய நட்பு அமைப்பின் உத்தியோகத்தர் திரு. சுரேஷ் றுக்மனன் அவர்களும்இ நாவிதன்வெளி கல்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர் திரு.காந்தன் அவர்களும் கலந்துகொண்டு இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சிகளை வழங்கினார்கள்.













Post A Comment:
0 comments so far,add yours