ச.குமணன்
அம்பாறை.
பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடந்த சில வாரங்களாக கரயோர பிரதேசத்தில் வீசிவரும் காற்றின் வேகத்தின் அதிகரிப்பினாலும் , நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன்னால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனாலும் , தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக குறிப்பிடுகின்றனர். மீன்பிடியை நம்பி வாழ்வை நடார்திவரும் மீனவ்ர்கள் மீன்பிடி குறைந்த்துள்ள காரணத்தால் மூலதனத்தை செலவுசெய்து கடலுக்கு சென்று வெறும்கையோடு வீடு செல்ல நேரிடுகினறது.
கடந்த மாதம் (17) ம் திகதி ஆழ் கடல் மீன்பிடிக்கு சென்ற காரைதீவு , மாளிகைக்காடு பகுதியை சேர்ந்த்த மூன்று மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours