ச.குமணன்
அம்பாறை.

 


ஐக்கிய தேசிய முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜீத் பிரேமதாசவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

புதிய இலங்கையை நோக்கி  எனும் பெயரில்   குறிப்பிட்டு ஞாயிற்றுக்கிழமை(6)  பரவலாக கல்முனை நகரப்பகுதி பாண்டிருப்பு நற்பிட்டிமுனை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.


இச்சுவரொட்டிகள் யாவும்    அம்பாறை மாவட்டத்தில் தமிழ்  முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.


இவ்வாறு திடிரென  ஒட்டப்பட்டுள்ள  இச்சுவரொட்டிகள் குறித்து  அப்பகுதி  மக்கள் மத்தியில் சலசலப்பை  ஏற்படுத்தி உள்ளதுடன் எதிர்வரும்  ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

தற்போது ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இச்சுவரொட்டிகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்   சாய்ந்தமருது வீதி எங்கும் ஒட்டப்பட்டிருந்த  ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரமதாசவின் சுவரொட்டிகளுக்கு கழிவு ஒயில் வீசப்பட்டுள்ளது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours