(த.தவக்குமார்)
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு இணைந்து நடாத்தும் அம்பாறை மாவட்ட சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்களுக்கான திறமைகளை வெளிக்காட்டும் கலை நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று (29) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும், அதிதிகளாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி ஜனாப் எம்.ஐ.றிஸ்னிமுத்து அவர்களும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி.தம்மிக்க குலதுங்க அவர்களும் மற்றும் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு நிலையப் பொறுப்பதிகாரிகளும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளும்இ சுகாதாரத் துறை சார்ந்தவர்களும் கல்வித்துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள 08 சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலுள்ள மாணவர்கள் கலந்துகொண்டு கலைஇகலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஒவ்வொரு சிறுவர் அபிவிருத்தி நிலையங்களுக்கும் நூலக அபிவிருத்திக்காக புத்தகங்களும் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது கலை, கலாச்சார நிகழ்வுகளில் பங்குபற்றிய சிறுவர் அபிவிருத்தி நிலைய மாணவர்களுக்கு சான்றிதழ்களும்இ பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் ஜனாப்.யு.எல்.அசாருதீன் அவர்களின் ஏற்பாட்டிலும், இஸ்லாமிக் றிலிப் அனுசரணையுடனும் நடைபெற்றது.











Share To:

Post A Comment:

0 comments so far,add yours