(க. விஜயரெத்தினம்)


மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் மக்கள் திரண்டு விளக்கேற்றினர்

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலம் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மழையையும் பொருட்படுத்தாது பெரும் திரளான மக்கள் திரண்டு வந்து  27/11/2019, மாவீரர் நாளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

பிரதான ஈகைச்சுடர் இரண்டு மாவீர்ர்களான அனல்வேந்தன், மணிமேகலன் ஆகியோரின் தயாரான திருமதி சாந்தலிங்கம் சின்னப்பிள்ளை தாயார் ஏற்றப்பட்டு பின்னர் உயிர்நீர்த்த மாவீரர்களின் உறவுகளினால் ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு கண்ணீர்மழைக்கு மத்தியில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள், அரசியல்வாதிகள் என பலர் கலந்துகொண்டனர்.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours