அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று மாலை 6மணி 5 நிமிடத்தில் ஏரம்பு செல்லம்மா என்ற நான்கு மாவீரர்களின் தாயார் முதல் ஈக சுடரினை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் நினைவேந்தல் சுடரினை ஏற்றி வைக்க உணர்வு பூர்வமாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் தாய்மார், உறவுகளின் கண்ணீரில் கரைந்தது .
தாயக விடுதலைக்காக தங்கள் இலட்சியமாக கொண்டு களமாடி மடிந்த அற்புத வீரர்களை இந்த புனித நாளில் நினைவு கூரப்பட்டது .
அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் துயிலும் இல்ல ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாகமணி கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் நினைவேந்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது
தாயக விடுதலை என்ற இலட்சியத்தை நெஞ்சிலே சுமந்து களமாடி மடிந்த காவிய நாயகர்களை மாவீரர்களின் பெற்றோர்களும் ,உறவுகளும் கண்ணீரில் கரைந்த நிகழ்வுகள் அனைவரது இதயங்களையும் கனக்க செய்தது.
இராணுவ தரப்பினர் மற்றும் பொலிஸார் உறவினர் கொண்டு வந்த மாவீர்களின் உருவப்படங்களை துயிலும் இல்லத்திற்குள் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை அத்தோடு கீதங்களும் இசைக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது . காலை முதல் வானவர்கள் கண்ணீராய் பூ மாரி சொரிய தாயக கனவான்களின் நினைவேந்தல் உணர்ச்சி பெருக்கோடு அனுஷ்டிக்க பட்டது.




Post A Comment:
0 comments so far,add yours