
இவரின் காரைதீவு இல்லத்தில் புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து இது தொடர்பாக பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவின் நடவடிக்கைகளை அரசியல், சமூக,, பொதுநல செயற்பாட்டாளர்கள் என்கிற வகையில் நெருக்கமாகவும், உன்னிப்பாகவும் நாம் மிக நீண்ட காலமாக அவதானித்து வருகின்றோம். எமது புரிதலின்படி அவருடைய நடவடிக்கைகள் தமிழின விரோத செயற்பாடுகளாகவே இருந்து வருகின்றன. இதுவே தமிழ் மக்களின் புரிதலும் ஆகும்.
தமிழர் போராட்டத்தை பயங்கரவாதமாக கண்டு அதை வேரறுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தவர். ஒன்றிணைந்த தமிழர் தாயகமாகிய வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக துண்டாட வேண்டும் என்பதில் முன்னின்று செயற்பட்டவர். இவற்றை செய்து தர வேண்டும் என்பதை அன்றைய ராஜபக்ஸ அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு முன் நிபந்தனைகளாக விதித்தவர். இவற்றை நிறைவேற்றி வைத்த பெருமையும் அவரையே சேரும் என்று இப்போது வரை பெருமிதத்துடன் தெரிவித்து வருபவர்.
ஆகவே தனியார் தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் இவர் உதிர்த்த வார்த்தை எமக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை. மாறாக அருவருப்பையே தந்திருக்கின்றது. அவரை அவரே அசிங்கப்படுத்தி கொண்டார். அவருடைய வார்த்தை பிரயோகம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை நேசிக்கின்ற அனைத்து மக்களுக்குமே கவலையை கொடுத்திருக்கின்றது.
எமது வன்மையான கண்டனங்களை அவருக்கு தெரியப்படுத்துகின்றோம். அத்துடன் உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுக்கின்றவர்கள் என்கிற வகையில் மலையக உறவுகளுக்கு அதாவுல்லாவின் வார்த்தை பிரயோகம் ஏற்படுத்தி இருக்கின்ற கவலையிலும் நாம் பங்கெடுக்கின்றோம்.
Post A Comment:
0 comments so far,add yours