புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் விரைவில் வௌியிடப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்துள்ளார்.
எவ்வித உடன்படிக்கைகளோ, இணக்கப்பாடுகளோ இன்றி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours