(துதி)
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள், பிரதேசக் கிளைகளின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் நிகழ்வு  கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.


இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், கட்சியின் பிரதேசக் கிளைகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



இதன் போது கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாவட்ட ரீதியில் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள், கட்சியின் மூலக் கிளைகள் உருவாக்கம் மற்றும் புனரமைப்பு, பிரதேச ரீதியான கட்சிக் கிளைகளைப் புனரமைத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours